

திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழாவை முன்னிட்டு வரும் 31-ம் தேதி இரவு முழுவதும் கோயிலைத் திறக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோயில், ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகும். இங்கு ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் திருப்படித் திருவிழா, வரும் 31-ம் தேதி மாலை தொடங்கி 2014 ஜனவரி முதல் தேதி வரை நடைபெறும்.
இதில் பங்கேற்க சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்கள் மட்டு மின்றி ஆந்திராவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அவர்கள் பக்திப் பரவசத்துடன் திருப்புகழ் பாடிக் கொண்டு, திருப்படிகளை ஏறிச் செல்வர்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கலை வாணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கோயில் சார் பாக இணை ஆணையர் புகழேந்தி கலந்து கொண்டு, பக்தர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து விவரித்தார். படி திரு விழா அன்று இரவு முழுவதும் கோயில் திறக்கப்பட்டிருக்கும்
பக்தர்கள் தரிசனம் செய்வதற் காக சிறப்பு தரிசன வழிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. கழிப்பிடம், குடிநீர், கண்காணிப்பு கேமரா மற்றும் தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
டி.எஸ்.பி., மணியழகன் பேசுகை யில், காவல்துறை சார்பில் 1,250 போலீஸார், எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார். தீயணைப்பு துறை சார்பில், மூன்று தீயணைப்பு வண்டிகளும், கூடுதல் வீரர்களும் சரவணப் பொய்கை உள்ளிட்ட இடங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, அதன் அதிகாரி பாஸ்கரன் தெரிவித்தார்.
நகராட்சி சார்பில், அதன் தலை வர் சௌந்திரராஜன் பேசும் போது, நகரத்தின் முக்கிய பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையை பேணிக் காப்பதற்காக, கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பக்தர்களின் வசதிக்காக டிச.31 மற்றும் ஜன.1-ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மருத்து வத் துறையின் சார்பில், முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில், திருத்தணி காவல் ஆய்வாளர் சிகாமணி, வட்டாட்சியர் செல்வகுமாரி, மனோகரன் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.