

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது.
கடைசி நாளுக்கு முந்தைய நாளான நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால், டிஎன் பிஎஸ்சி இணையதளம் மெதுவாக இயங்கியது.
இதைத்தொடர்ந்து, ஆன்லை னில் விண்ணப்பிப்பதில் தேர்வர்கள் சிரமங்களை எதிர் கொண்டனர். அவர்களால் ஆன் லைன் பதிவை முழுமையாக செய்ய முடியவில்லை. எனவே, விண்ணப் பிப்பதற்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்கவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி-க்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.