

சென்னையில் மாணவர் போராட் டத்தையொட்டி நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலி யுறுத்தினார்.
கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஜல்லிக்கட்டுக்காக தமிழகத் தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத் தில் நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு வழக்கில் முறையாக வாதிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி கள் தமிழகத்தில் தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒரு வரான அபிஷேக் சிங்வி ஜல்லிக் கட்டுக்கு எதிரான வழக்கில் ஆஜராவதாக வெளியான தகவல் ஆதாரமற்றது. ஜல்லிக்கட்டு வழக் கில் அவர் ஆஜராக மாட்டார்.
தமிழக அரசின் மீது மத்திய பாஜக அரசு ஆதிக்கம் செலுத்து கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப் பினரின் ஒழுக்கத்துக்கு மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் மீதான குற்றச்சாட்டுகளே உதாரணம்.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் மாணவர் போராட் டத்தையொட்டி நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளி யில் தெரியும் என்றார்.