Published : 19 Feb 2017 09:35 AM
Last Updated : 19 Feb 2017 09:35 AM

திமுகவின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்பட்டுள்ளது: கி.வீரமணி

திமுவின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடை பெற்ற அமளிகள் வரலாற் றில் தீராத கறையை ஏற் படுத்தி விட்டன. எந்த அணிக் கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலை யோடு திமுக நின்றிருந்தால் இவ்வளவு மனவேதனையும், வெட்கப்படத்தக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டி ருக்காது. பேரவைத்தலைவர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லை. வெட்கமும், வேதனையும்பட வேண்டிய தலை குனிவான நிலையும் கூட.

இந்தக் கட்டத்தில் கருணாநிதி சபையில் இருந்து வழி நடத்த இல்லாததால் ஏற் பட்ட நிலைமை இது. எனினும், பாஜகவின் முயற்சிகள் தோல்வி யடைந்தது. இனியாவது பாஜக தங்களின் சித்து விளை யாட்டுகள், பொம்மலாட்டங் களை நிறுத்திக் கொள்ள வேண்டும். 122 உறுப்பினர்களை பெற்று நம்பிக்கை வாக்கெடுப் பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x