

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், அவசரச் சட்டத்தை தமிழக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு ஏற்பாடு செய்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க, ராப்பூசலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், ஆட்சியர் சு.கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் 168 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதையடுத்து, காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள லெட்சுமணப்பட்டியைச் சேர்ந்த மோகன் (30), ஒடுக்கூரைச் சேர்ந்த ராஜா (35), காலாடிப்பட்டைச் சேர்ந்த பெரியசாமி (30), ராப்பூசல் நடேசன் (55), துரையரசன் (32), மாங்கனாப்பட்டி செல்வம்(36), பரம்பூர் பி.மாசிலாமணி(19), கல்கண்டபுரம் முருகானந்தம்(23), கீரனூர் ராஜா(25), கோட்டைக்காரன்பட்டி மார்ட்டின்(28), இலுப்பூர் முருகேசன்(26), குப்பத்திபட்டி மூர்த்தி(24), சங்கர்(25), லெட்சுமணப்பட்டி பாலு(40), மாங்குடி கருப்பையா (30), கீழஎண்ணை பாண்டியன்(26), செங்குறிச்சி பாலு(26), காட்டூர் கலைச்செல்வன்(23), நரேந்திரன்(25) உட்பட 30 பேர் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் லெட்சுமணப்பட்டி மோகன், ஒடுக்கூர் ராஜா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சாரம் சரிந்தது
வாடிவாசலில் இருந்து வெளியேறிய சில காளைகள் உடனே வெளியேறாமல் மாடுபிடி வீரர்களை மிரட்டியபோது, அங்குமிங்குமாக வீரர்கள் ஓடியதால் சாரம் சரிந்தது. இதில் பலர் காயமடைந்தனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படாததே இதற்குக் காரணம் என மாடுபிடி வீரர் கள், பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல, ஜல்லிக் கட்டுக்கு ஓட்டிவரப்பட்ட எந்தக் காளையையும் பரிசோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
வாடிவாசலில் இருந்து வெளியேறிய சில காளைகள் உடனே வெளியேறாமல் மாடுபிடி வீரர்களை மிரட்டியபோது, அங்குமிங்குமாக வீரர்கள் ஓடியதால் சாரம் சரிந்தது. இதில் பலர் காயமடைந்தனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படதாதே இதற்குக் காரணம் என மாடுபிடி வீரர்கள் குற்றம் சாட்டினர்.