

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகள் விவசாயத்துக்கு எதிராகவும், நிலத்தடி நீராதாரத்தை பாதிக்கும் வகையிலும் இருக்காது என ஓஎன்ஜிசி- காவிரி அசெட் செயல் இயக்குநர் குல்பீர் சிங் தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று நடைபெற்ற ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விழிப்பு ணர்வு விளம்பர சிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
ஓஎன்ஜிசி நிறுவனம் குறித்து பொதுமக்களிடம் தவறான கருத்து கள் விதைக்கப்பட்டுள்ளன. நிறுவ னத்தின் உண்மைத் தன்மை, அதன் செயல்பாடுகள், சமூகப் பொறுப்பு ணர்வு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பர நிகழ்ச்சித் தொடர்கள் உருவாக்க திட்டமிடப் பட்டு, அதன் முதல்கட்டமாக அகில இந்திய வானொலி கொடைக்கானல் பண்பலை நிலையத்தில் இருந்து விளம்பரங்கள் ஒலிபரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது, வரும் 60 நாட்களுக்கு ஒலிபரப்பப்படும்.
ஓஎன்ஜிசியின் செயல்பாடுகள் விவசாயத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நிலத்தடி நீராதாரங் களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவ னம் மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கவில்லை. எதிர்காலத்திலும் அதற்கான திட்டங்கள் இல்லை.
காவிரி டெல்டாவில் நாள்தோறும் 820 டன் கச்சா எண்ணெய் எடுக்கப் படுகிறது. ஆண்டுக்கு ரூ.1,306 கோடிக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் மூலம் வணிகம் செய்து, அதற்கு ராயல்டி உட்பட பல்வேறு வரி வரு மானங்களை நாட்டுக்கு அளித்து வருகிறது.
தமிழகத்தில் 31 இடங்களில் 702 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. அவற்றில் மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் (பாறை எரிவாயு) எடுப்பதற்கான ஆய்வுப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு 2017 வரை தமிழகத்தில் பணிகள் முடிவடைந்த 21 இடங்களில் நிலத்தைச் சீரமைத்து மீண்டும் விவசாயிகளிடம் கொடுத் துள்ளோம். அதுபோல, ஓஎன்ஜிசி பணிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நிலத்தை மீண்டும் சீரமைத்து கொடுத்து விடுவோம் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என விவசாயி கள் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை மத்திய அரசுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் புரிய வைக் குமா என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, “அதுபோன்ற நிலை ஏற்பட் டால், மத்திய அரசின் கவனத்துக்கு இதை கொண்டுசெல்வோம்” என்றார்.
நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி காவிரிப் படுகை பொது மேலாளர்கள் ஏ.பாலசந்திரன், எஸ்.குருநாதன், கே.புகழேந்தி, வி.சுந்தர்ராஜன், வி.வைரவசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.