

‘இறை அருள் எனக்கு என்றைக் கும் துணை நிற்கும். எல்லா சோதனை களையும் கடந்து நான் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையால், அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இதனால், வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, அன்னதான நிகழ்ச்சிகள் நடத்துவ தில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பின்னர் இடைக் கால ஜாமீனில் வெளிவந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சித் தொண்டர் களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். விடுதலையான மறுநாள் அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக மக்களுக் காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை யில் ‘எல்லா சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவேன்’ என்று கட்சியினருக்கு மேலும் நம்பிக்கை ஊட்டியுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக் காகவும், தமிழக மக்களின் நலன் களுக்காகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டி ருக்கும் எனக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பொதுமக்கள், என் உயிரினும் மேலான உடன் பிறப்புகள், மாணவச் செல்வங்கள் என 193 பேர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
ஏற்கனவே குறிப்பிட்டிருந்த 193 பேருடன், மேலும் 26 பேர் பல்வேறு வழிகளில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று தற்போது வந்திருக்கும் தகவல் என்னை பெரும் துயரத்துக்கு ஆளாக்கியுள்ளது. இந்த 26 பேரின் குடும்பத்தினருக்கும், அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
எல்லா சோதனைகளையும் கடந்து நான் வெற்றி பெறுவேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இறை அருள் எனக்கு என்றைக்கும் துணை நிற்கும் என்பதுதான் எனது நம்பிக்கையின் அடிப்படை. எனவே, தமிழக மக்கள் யாரும் இனிமேல், இதுபோன்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ஜெய லலிதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கையால் அதிமுக நிர்வாகி கள், அமைச்சர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இறை அருள் தனக்கு இருப்பதாக அறிக்கையில் ஜெய லலிதா கூறியிருப்பதால் வழிபாட்டுத் தலங்களில் பிரார்த் தனை மற்றும் சிறப்பு பூஜை களில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பலர், வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை யாக வேண்டிக் கொண்டு விரதம் இருந்து வருகின்றனர். நேர்த்திக் கடன் செலுத்துதல், அன்னதானம், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் அதிகரித்துள்ளன.