

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 தொழி லாளர்கள் பரிதாபமாக உயிரிழந் தனர்.
வேலூர் மாவட்டம் நெமிலி வட்டத்தைச் சேர்ந்தவர் குமார்(27). இவர், ரயில்வே ஒப்பந்ததாரரான தனது நண்பர் பாஸ்கர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேரை தனது காரில் அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு வேலூ ரில் இருந்து காரைக்குடிக்குப் புறப்பட்டார். கார் நேற்று அதிகாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்ப லூர் மாவட்டம் பாடாலூரை அடுத்த சந்தைப்பேட்டை அருகே வந்தபோது, திடீரென கட்டுப் பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்புச் சுவர் மீது மோதி, எதிர்ப்புற சாலையில் கவிழ்ந்தது. அப்போது, எதிர்ப்புற சாலையில் கரூரில் இருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த மினி லாரி, கவிழ்ந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த குமார் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்குப் போராடினர்.
தகவலறிந்த, பாடாலூர் போலீஸார் அந்த இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், கார் ஓட்டுநர் குமார்(27), பார்த்திபன்(36), சங்கர்(35), நரசிம் மன்(42) ஆகியோர் காருக்குள் உடல் நசுங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
மேலும், படுகாயமடைந்து காருக்குள் சிக்கியிருந்த பாலாஜி, சேட்டு, பாபு, ராஜேஷ், ஜனார்த்தனன், அரிபாபு, மணி, மாதவன், மற்றொரு நரசிம்மன்(49) ஆகியோரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் நரசிம்மன், மணி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே நரசிம்மன் உயிரிழந்தார்.
விபத்தில் பலியான 5 பேரின் சடலங்களும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.