

சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில் ஊட்டி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.கணேஷ் பேசியதாவது:
ஊட்டிக்கு லட்சக்கணக்கானோர் சுற்றுலா வருகின்றனர். ஆனால், குடிநீர் வசதி போதுமான அளவு இல்லை. ஊட்டி நகராட்சிக்கு போதிய வருவாய் இல்லை. எனவே, அரசு ரூ.100 கோடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘ஊட்டிக்கு உள் ளாட்சித் துறை மூலம் மட்டும் ரூ.166 கோடியே 73 லட்சத்தில் 14,925 பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 5 ஆயிரம் பேருக்கான குடியிருப்பு விவகாரம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட் டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.