

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி இருவரையும் விடுதலை செய் தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப் பில் கால அவகாசம் கோரியதால், விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.