புழல் சிறை சுற்றுச்சுவர் அருகே கத்தரிக்கோல், செல்போன், கஞ்சா கண்டெடுப்பு: போலீஸார் தீவிர விசாரணை

புழல் சிறை சுற்றுச்சுவர் அருகே கத்தரிக்கோல், செல்போன், கஞ்சா கண்டெடுப்பு: போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

புழல் சிறைச்சாலை சுற்றுச் சுவர் அருகில் கத்தரிக்கோல், செல்போன், கஞ்சா, மல்டிபின் சார்ஜர் வைக்கப்பட்ட துணிப் பையை போலீஸார் கண்டு பிடித்தனர்.

சென்னை புழல் சிறைச் சாலை கண்காணிப்பாளர் அன்பழகன் மற்றும் சிறை காவ லர்கள் வழக்கம்போல் நேற்று காலை 5 மணியளவில் சிறை யின் சுற்றுச்சுவர் மற்றும் வெளிப் பகுதியில் சோதனையில் ஈடு பட்டனர்.

300 கிராம் கஞ்சா

அப்போது மதில் சுவர் அருகே வெளிப்பகுதியில் ஒரு துணிப்பை இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது, 2 செல்போன்கள், 2 லைட்டர்கள், ஒரு கத்தரிக் கோல், மல்ட்டி பின் சார்ஜர், 300 கிராம் கஞ்சா மற்றும் 10-க்கும் மேற்பட்ட பான்பராக், மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.

சிறை காவலர்கள் அவற்றை கைப்பற்றி, புழல் போலீஸில் ஒப்படைத்து புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செல்போனில் பேச்சு

புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணைப் பிரிவு கைதிகள் இருக்கும் பகுதியில், நேற்று காலையில் ஜெயிலர் (பொறுப்பு) உதயகுமார் மற்றும் சிறை காவலர்கள் சோதனையில் ஈடு பட்டனர். அப்போது கழிப் பறையில் இருந்து செல்போனில் பேசும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, 2 கைதிகள் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் 2 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த அசோக் (31), அரிதாஸ் (26) என்பது தெரிந்தது. இதுகுறித்து புழல் போலீஸில் சிறைத்துறை சார்பில் புகார் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in