

பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பம் உலக தரத்தில் மேம்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
33 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், நிர்ணயித்த இலக்கை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிஎஸ்எல்வி ராக்கெட்டை ஒவ் வொரு முறை விண்ணில் செலுத்தும்போதும், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை அனுப்புவது, அதன் இன்ஜினை பல முறை நிறுத்தி பின்னர் இயக்குவது, அதிக எண்ணிக்கையிலான செயற் கைக்கோள்களை அனுப்புவது என புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்துகிறோம். இனிவரும் காலங்களில் அதன் தொழில்நுட்பம் மேலும் மேம்படுத்தப்படும். எங் களது முயற்சியால் இந்த ராக்கெட் தொழில்நுட்பம் உலக தரத்தில் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது.
இந்திய பிராந்திய வழிகாட்டி அமைப்புக்காக ஐஆர்என்எஸ்எஸ்- ஏ1 என்ற 7 செயற்கைக்கோள்கள் கடந்த 2013-ல் விண்ணில் ஏவப் பட்டன. அதில் ஒரு செயற்கைக் கோளில் அணு கடிகாரம் செயலிழந்துவிட்டது. அதனால் அந்த செயற்கைக்கோளுக்கு மாற் றாக மற்றொரு செயற்கைக் கோளை, சில மாதங்களில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இந்த குறைபாட்டால் அந்த செயற்கைக்கோள்கள் வழங்கும் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஜிசாட்-17 செயற்கைக் கோள்
தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-17, பிரெஞ்சு கயானா ஏவுதளத்திலிருந்து வரும் 28-ம் தேதி ஏவப்பட உள்ளது. 5.8 டன் எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை விரைவில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் அதிகபட்சமாக 3.2 டன் கொண்ட செயற்கைக்கோளைத்தான் விண்ணில் செலுத்தியிருக்கிறோம். அதற்கு மேல் எடைகொண்டதாக ஜிசாட்-17 செயற்கைக்கோள் உள்ளது. அதை ஏவுவதற்கான தொழில்நுட்பம் இஸ்ரோவில் மேம்படுத்தப்படவில்லை.
நாம் எடை குறைந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக் கெட் மூலம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் விண்ணில் ஏவி வருகிறோம். தற்போது நாம் எடை குறைந்த செயற்கைக்கோள்களை வெளிநாடுகளில் இருந்து ஏவுவ தில்லை. அதேபோல, இனி வரும் ஆண்டுகளில், அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ மேம்படுத்தும். அதன் பிறகு, வெளிநாடுகளில் இருந்து இந்திய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வேண்டிய அவசியம் இருக்காது.
கிரகங்களில் ஆய்வு
இஸ்ரோ சார்பில், ஆண்டுக்கு 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட் களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டு களையும் விண்ணில் ஏவ திட்ட மிட்டிருக்கிறோம். மேலும் செவ் வாய் மற்றும் வெள்ளி கிரகங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கான செயற்கைக்கோள்களை அனுப்பு வதற்காக திட்டமிட்டிருக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட் டுள்ளது. அனுமதி கிடைத்த வுடன் எங்கள் ஆய்வைத் தொடங்குவோம்
இவ்வாறு அவர் கூறினார்.