

காஞ்சிபுரத்தில் கடந்த 17-ம் தேதி மாலை மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். பின்னர் அவர்கள் அனை வரும் ஒன்று திரண்டு வந்து காஞ்சிபுரம் மண்டித்தெரு பகுதி யில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டம் கடந்த 6 நாட்களாக நீடித்தது. இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மாணவிகளும் வந்து அதிக அளவில் பங்கேற்றனர். இப்போராட்டம் கடந்த 6 நாளாக நீடித்து வந்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். இதனால் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதனிடையே நேற்று காலையில் போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.
போராட்டக் களத்துக்குள் புதிதாக யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. மாணவர்களி டம் உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்ரீநாதா உள்பட பலர் பங் கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு வந்துவிட்டதால் உனடியாக அனைவரும் வெளியேற வேண் டும் என்றும் அவர்கள் வலி யுறுத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டக்களத்தில் இருந்து வெளியேற தயக்கம் காட்டினர்.
மாணவர்கள் கலைந்து செல்லவில்லை என்றால் நட வடிக்கை எடுக்க வேண்டி இருக் கும் என்று கூறினர். பின்னர் அனைவரையும் வெளியேற்றத் தொடங்கினர்.
மேலும் மாணவர்களும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 6 நாளாக நடத்தி வந்த போராட்டம் நேற்று காலையில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து போராட்டத்துக்காக போடப்பட்டிருந்த பந்தல்களை பிரித்து அப்புறப்படுத்தினர்.
போராட்டம் வாபஸ்
ஜல்லிகட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டதையடுத்து, மாமல்லபுரம் மற்றும் கல்பாக் கம் பகுதிகளில் நடந்து வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட் டது. முன்னதாக பல்வேறு பகுதி களில் போலீஸாரின் அறிவுறுத் தலின்பேரில் போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மாமல்லபுரம் மற்றும் கல் பாக்கம், திருப்போரூர், கேளம் பாக்கம் ஆகிய பகுதிகளில் ஜல்லிகட்டுக்காக பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட் டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம், அந்தந்த பகுதி போலீஸார், அமைதியான முறை யில் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.