Published : 03 Aug 2016 08:39 AM
Last Updated : 03 Aug 2016 08:39 AM

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் முதல் ஒரு மணி நேரம் கேள்வி பதில் நேரமாக எடுத்துக் கொள்ளப்படும். உறுப்பினர்களின் மூலக் கேள்வி, அதுதொடர்பான துணைக் கேள்விகளுக்கு அமைச் சர்கள் பதிலளிப்பர். முக்கியமான பிரச்சினைகள் எழும்போது, கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, அந்த ஒரு மணி நேரம் வேறு அலுவல்களுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தமிழகத்தில் 15-வது சட்டப் பேரவை அமைந்தபிறகு அதன் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 16-ம் தேதி ஆளுநர் உரை யுடன் தொடங்கிய, 23-ம் தேதி வரை நடந்தது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி முதல் நடந்து வரு கிறது. புதிய பேரவை அமைந் துள்ளதால், நேற்று முன்தினம் வரை அவையில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து நேற்று முன் தினம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி னார். அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘உறுப் பினர்கள் அளித்த கேள்விகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துறைகளி டம் இருந்து பதில் வந்ததும் விரைவில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றார்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முதல்முறையாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த அரசு ஆவன செய்யுமா? என முதல் கேள் வியை அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்) எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘தரங்கம்பாடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க விரி வான திட்ட அறிக்கை தயாரிக் கப்பட்டுள்ளது. நிர்வாக ஒப்பு தல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

திமுக உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கோவி.செழியன், எஸ்.ஆஸ்டின், அதிமுக உறுப்பினர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, பி.பலராமன், முக் குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகிய 8 பேர் துணைக் கேள்விகள் எழுப்பினர். 27 நிமிடங்கள் முதல் கேள்வி மற்றும் துணை கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதல் அளித்தார்.

முதல் நாளான நேற்று 5 கேள்விகள் எடுத்துக் கொள் ளப்பட்டன. மொத்தம் 59 நிமிடங்கள் கேள்வி நேரம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x