எம்.நடராஜன் வரி ஏய்ப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு

எம்.நடராஜன் வரி ஏய்ப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு
Updated on
1 min read

எம்.நடராஜன் மீதான வரி ஏய்ப்பு வழக்கை பிப்ரவரி 10-ம் தேதிக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னை துறைமுகத்துக்கு லண்டனில் இருந்து லக்சஸ் ரக சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது. 1994-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்தக் காரை 93-ம் ஆண்டு தயாரித்ததாகக் கூறி போலி ஆவணங்கள் தயா ரித்து குறைவான சுங்கவரி செலுத் தப்பட்டது. இதில் ரூ. 1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவரான எம்.நட ராஜன், வி.என்.பாஸ்கரன், லண் டனைச் சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஸ், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா, உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதில் பவானி அப்ரூவராக மாறினார். பாலகிருஷ்ணன் தலை மறைவானார். இதையடுத்து எஞ்சிய 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ல் உத்தரவி்ட்டது.

இதே குற்றத்துக்காக அமலாக் கத்துறையும் எம்.நடராஜன், பாஸ் கரன் உள்ளிட்டவர்கள் மீது தனியாக வழக்குப்பதிவு செய்தி ருந்தது. இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி எம்.நடராஜன் தாக்கல் செய்த மனுவை ஏற் கெனவே தள்ளுபடி செய்த எழும் பூர் பொருளாதார குற்ற வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை நேற் றைக்கு தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று விசார ணைக்கு எம்.நடராஜன் ஆஜராகா ததால் விசாரணையை நீதிபதி வரும் பிப்.10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ரூ. 1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி எம்.நடராஜன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in