

ராம்குமாரின் உடலை பார்ப்பதற் காக ராயப்பேட்டை அரசு மருத்து மனைக்கு நேற்று இரவு வந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
ராம்குமார் தற்கொலை செய் திருக்க வாய்பில்லை. கொலை செய்யப்பட்டிருக்கத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை அல்ல. திடமான மன நிலையிலேயே இருந்தார்.
கடந்த 2, 3 நாட்களாகவே, ‘ராம்குமாரை விரைவாக ஜாமீனில் வெளியே கொண்டு வந்துவிடுங் கள். அவரின் உயிருக்கு அச் சுறுத்தல் உள்ளது’ என்று சிறைத் துறையில் இருந்தும், வெளியில் இருந்தும் எனக்கு தகவல் கிடைத் தது. அதன் அடிப்படையில்தான் நேற்று முன்தினம் புழல் சிறைக் குச் சென்று ராம்குமாரை சந்தித் தேன். காலை 11 முதல் 12.45 மணி வரை தனிமையில் அவரிடம் பேசினேன்.
அப்போது தெளிவான மனநிலையில்தான் இருந்தார். “நான் குற்றவாளி இல்லை என் பதை நீங்கள் நிரூபித்துவிடுவீர்கள்” என்று மிகுந்த நம்பிக்கையோடு கூறினார். “சில விஷயங்களை நான் மறைத்து மறைத்துப் பேச வேண்டியுள்ளது. எனக்கு இங்கு மிகுந்த நெருக்கடி உள்ளது” என்றும் கூறினார்.
சிறைத்துறை அதிகாரிகளிடம் எனது செல்போன் எண் உள்ளிட்ட எங்கள் வழக்கறிஞர்கள் 17 பேரின் செல்போன் எண்களும் உள்ளது. ஆனால், எங்களில் ஒருவருக்குகூட ராம்குமாரின் இறப்பு குறித்து போலீஸார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.
ராம்குமாரின் மரணம் குறித்தும் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை போலீஸார் வெளியிடுகின்றனர். எனவே, ராம் குமாரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீதி விசாரணை வேண்டும்
ராம்குமாரின் உறவினர் செல்வம் கூறும்போது, ‘இறப்புக் கான உண்மையான காரணத்தை தெரிவிக்காமல், போலீஸார் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருகின்றனர்.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என தொடர்ந்து வாதிட்டு வருகிறோம். இந்நிலையில் அவர் இறந்திருப்பது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்ற வாளியை மறைப்பதற்காக போலீ ஸாரே ராம்குமாரை கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந் துள்ளது. எனவே, ராம்குமார் இறப்பு குறித்து முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண் டும்’’ என்றார்.
சாலை மறியல்
முன்னதாக ராம்குமாரின் சடலத்தை பார்க்க வழக்கறிஞர் ராம்ராஜிக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால், ஆவேச மடைந்த ராம்ராஜ் மற்றும் ராம் குமாரின் உறவினர்கள் ராயப் பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நீண்ட நேரத்துக்குப் பின்னரே ராயப்பேட்டை பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.