Last Updated : 12 May, 2017 07:33 AM

 

Published : 12 May 2017 07:33 AM
Last Updated : 12 May 2017 07:33 AM

இன்று உலக செவிலியர் தினம்: ஓய்வறியா உன்னத பணிக்கு உரிய பலன் கிடைக்குமா?

மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதப் பணியை உலகுக்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day) ஆண்டுதோறும் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்தக் காலத்தில் செவிலியர் களின் சேவை அவ்வளவாக கவு ரவப் பணியாகக் கருதப்படவில்லை. நாளடைவில் விழிப்புணர்வு கார ணமாக செவிலியர்கள் மீது மரியாதை உருவாகியிருக்கிறது. ஆனால் மருத்துவமனைக்கும் நோயாளிகளுக்கும் பாலமாக இருக் கும் அவர்களுடைய பணிகளுக்கு, உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.

இதுகுறித்து தமிழ்நாடு செவிலியர்கள் சங்க மாநிலச் செயலாளர் லீலா கூறியதாவது: ‘‘கிராமப்புறங்களில் செவிலியர் களின் சேவை நிரந்தரத் தேவை யாக உள்ளபோதும், தமிழகம் முழுவதுமுள்ள 2 ஆயிரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக நமது அரசாங் கங்கள் நிரந்தரச் செவிலியர் பணி யிடங்களைத் தோற்றுவிக்க வில்லை. அதற்குப் பதிலாக, தொகுப்பூதியம் என்கிற பெயரில் செவிலியர்களிடம் உழைப்புச் சுரண்டல் நடத்துகிறது. அந்த தொகுப்பூதியமும் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் சேர்த்து வழங்கப்படுகிறது.

ரூ.72 கோடி ஒதுக்கினால், தமி ழகம் முழுவதும் ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கும் ஒரு நிரந்தரச் செவிலியரை அரசால் நியமிக்க இயலும். ஆனால், இதற்குக் கைகொடுக்காமல் இழுத் தடித்து வருகிறது நிதித்துறை. அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ள படுக்கைகளின் விகிதாச்சார அடிப் படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இது தொடர் பாக வரும் 15-ம்தேதி பேச்சுவார்த் தைக்கு அரசு அழைத்துள்ளது. அதில் சுமூக முடிவு ஏற்படும் என நம்புகிறோம். இல்லையெனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.

தமிழ்நாடு ஒப்பந்த செவிலியர் கள் சங்கத் தலைவர் மாரிமுத்து கூறும்போது, ‘‘சமீபத்தில் ஒரு இளம் நடிகர் செவிலியர் வேட மிட்டு செவிலியர் பணியை மலினப் படுத்தியிருந்தார். மருத்துவமனை யின் முதுகெலும்பாக உள்ள செவிலியர்களை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படங்களில் காட்சி அமைக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படும் என்று அரசாங்கமும் அதிகாரிகளும் கொள்ளும் பெருமைக்கு அடிப் படைக் காரணம் ஒப்பந்த செவிலி யர்கள் என்பதை அரசு மறந்து விடுகிறது. போதுமான செவிலியர் கள் இல்லாத காரணத்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பல வற்றில், இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒரு ஒப்பந்தச் செவி லியரே பணிபுரிந்து வரும் சூழலே நிலவுகிறது. கூடுதல் நேரத்துக்குக் கூடுதல் ஊதியமும் கிடையாது.

டிஎன்பிஸ்சி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவோர் நிரந்தர அரசு ஊழியர்களாகவும், மருத்துவ தேர்வு வாரிய மூலம் தேர்வு செய்யப்படும் மருத்துவர் அரசு மருத்துவராகவும் பணியமர்த்தப்படும்போது, செவிலி யர்கள் மட்டும் ஏன் ஒப்பந்த அடிப் படையில் பணியமர்த்தப்படுகின் றனர்?

பேறுகால விடுப்பு இல்லை

நிரந்தரச் செவிலியருக்கும், ஒப் பந்த செவிலியருக்கும் பணி வேறு பாடில்லாத நிலையில், ஊதியத்தில் மட்டும் ஏன் வேறுபாடு? அவர் களுக்கு வழங்கப்படும் சலுகை களையும் வழங்க அரசு முன்வர வேண்டும். பெரும்பாலான ஒப்பந்த செவிலியர்கள் இளம் வயதில் செவி லியர்களாக தங்களைத் தயார்படுத் திக் கொண்டு இத்தொழிலில் ஈடுபடு கின்றனர். ஒப்பந்த செவிலியருக்கு பேறுகால விடுப்பைக் கூட அரசு வழங்குதில்லை. ஆனால் அவர் களைக் கொண்டு தாய் சேய் நலமுடன் வாழ, ‘குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும், பேறு கால ஓய்வும் அவசியம்’ என அரசு வலியுறுத்த சொல்கிறது. அந்த அவசியம் இவர்களுக்கும் பொருத்தும் என்பதை உணர மறுக் கிறது. மத்திய மாநில அரசுகள் செவிலியர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, செவிலியர் கள் செய்யும் பணிக்கு உண் டான மதிப்பை வழங்க வழிவகுக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x