

சாலவாக்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், நாயுடு மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவரது மனைவி ஜெயா(40) மற்றும் மகன் சரவணன்(19). 3 பேரும் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் சாலை பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெங்கடேசன் குடும்பத்துடன் சொந்த கிராமத் துக்குச் செல்வதற்காக, செங்கல் பட்டு- உத்திரமேரூர் சாலையில் மனைவி மற்றும் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்தார். அப்போது, நெல்வாய் கூட்ரோடு அருகே சாலையில் எதிரே வந்த தனியார் தொழிற் சாலைக்கு, தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வேன் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.
இதில், தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தக வல் அறிந்து சென்ற சாலவாக்கம் போலீஸார் படுகாயமடைந்த ஜெயாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்தும் இறந்தார். இதுதொடர்பாக, சாலவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளைஞர் பலி
சூரடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் குமார்(39). இவர் மோட்டார் சைக்கிளில் கூவத்தூரில் இருந்து சூரடிமங்கலம் நோக்கிச் சென்றார். அப்போது கோட்டைமேடு என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக சதுரங்கபட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.