பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு முகாம்: முதல் நாளில் 50 ஆயிரம் பேர் பதிவு செய்தனர்

பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு முகாம்: முதல் நாளில் 50 ஆயிரம் பேர் பதிவு செய்தனர்
Updated on
1 min read

பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் ஜுன் 20-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்காக (சீனியாரிட்டி) பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள சிறப்பு முகாமுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மதிப்பெண் சான்றிதழை பெற்ற மாணவ-மாணவிகள் கையோடு தங்கள் பிளஸ் 2 கல்வித்தகுதியை உடனடியாக பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவு செய்துகொண்டனர். முதல் நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்ததாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறப்பு பதிவு முகாம் ஜூலை 4-ம் தேதி வரை தொடர்ந்து நடை பெறும். மாணவர்கள் வெவ்வேறு நாட்களில் பதிவுசெய்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஜுன் 20-ம் தேதியிட்ட பதிவுமூப்பு வழங்கப்படும் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in