

உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, புதுக்கோட்டையில் திமுக ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கினர்.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் பழனிசாமி நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார். இதில் கலந்துகொள்ளச் சென்ற புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 திமுக எம்எல்ஏக்களையும், தொண்டர்களையும் போலீஸார் முன்கூட்டியே கைது செய்தனர்.
இதைக் கண்டித்து புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 11) ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இதற்கு போலீஸார் முதலில் அனுமதி மறுத்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிடக் கோரி புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலர் (பொறுப்பு) கே.கே.செல்லபாண்டி யன், உயர் நீதிமன்ற கிளையில் நேற்று அவசர மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந் தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. திமுக ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் அனுமதி வழங்கியுள்ளார் என அரசு வழக்கறிஞர் நீதிபதியி டம் தெரிவித்தார். ஆனால் மனு தாரர் தரப்பில் அனுமதி வழங்கப் பட்டது தொடர்பாக தங்களுக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசு வழக்கறிஞர் கூறியதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸாரே அனுமதி வழங்கியிருப்பதால், இந்த மனு முடித்து வைக்கப் படுகிறது. இருப்பினும் ஏதா வது இடையூறு ஏற்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன் றத்தை நாடுவதற்கு உரிமை வழங்கப்படுகிறது என உத்தர விட்டார்.