

இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், கனிமத்துறை இயக்குநர் அதுல் ஆனந்த் ஆகியோருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தமிழக தலைமைச் செயலா ளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப் பட்டவர் கு.ஞானதேசிகன். 2016 ஜூனில், மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஞானதேசிகன் மாற்றப் பட்டார். அதன்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருடன், கனிமவளத்துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தீர்ப்பாயத்தில் வழக்கு
இவர்கள் இருவரும் தங்கள் இடைநீக்கத்தை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இடைநீக்கம் வாபஸ்
இந்நிலையில், தற்போது இருவரது இடைநீக்கமும் திரும்ப பெறப்பட்டு, புதிய பணியிடங்களில் நியமிக்கப் பட்டுள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கு.ஞானதேசிகனுக்கு, அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் பதவி அளிக்கப்பட் டுள்ளது. அதுல் ஆனந்தின் இடைநீக்கமும் ரத்து செய்யப் பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக நியமிக்கப்பட் டுள்ளார். இது முதல்வர் ஓ.பன் னீர்செல்வத்தின் நடவடிக்கை என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.