

முதல்வர் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு:
''முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன.
முதல்வர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.