

இந்த ஆண்டுக்கான டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது.
எம்.ஏ.சி. அறக்கொடையின் நிறுவனர் டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியாரின் 96-வது பிறந்த நாள் விழா அக்டோபர் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது. நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் 3 விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றி வரும் முனைவர் ஆ.ஆனந்தராசனுக்கும், டாக்டர் ஏ.சி.முத்தையா விருது தொழில் துறையில் முதல் தலைமுறை தொழில் முனைவோராக சிறந்து விளங்கும் ராம்பிரசாத் குருநாதனுக்கும், தமிழ்க் கவிதை மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு நற்பங்கு அளித்தமைக்காக கவிஞர் வைரமுத்துக்கு டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருதும் வழங்கப்படுகிறது.