

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசரை நியமிக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் தோல் விக்கு பொறுப்பேற்று தமிழக காங் கிரஸ் தலைவர் பதவியை இளங் கோவன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 25 நாட்களாகியும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
தலைவர் பதவிக்கான போட்டி யில் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜெயக்குமார், சுதர்சன நாச்சியப் பன், மாணிக் தாகூர், எச்.வசந்த குமார், எஸ்.விஜயதரணி, பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாக ராஜன் என பலரும் உள்ளனர். இவர் கள் அனைவரும் கடந்த 3 வாரங்க ளாக டெல்லியில் முகாமிட்டு தங்க ளுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில், திருநாவுக்கரசரை தலைவராக நியமிக்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்பட்டது. இதை ஏற்காத ப.சிதம்பரம், தானே தலைவராக இருக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற இளங்கோவன், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப் போது, திருநாவுக்கரசரை தலைவராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘திருநாவுக்கரசர் அதிமுக, பாஜகவில் இருந்து வந்தவர். எந்தக் கட்சிக்கும் விசுவாசமாக அவர் இருந்ததில்லை. திராவிடம், மத வாதம் என மாறிமாறி பயணித்த அவரை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். ப.சிதம்பரம் தொண்டர்களுடன் நெருங்கிப் பழ காதவர். அவருக்கு மக்களிடமும், தொண்டர்களிடமும் செல்வாக்கு இல்லை. இந்த இருவரைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் தலைவராக நியமிக்கலாம். எந்த முடிவு எடுத்தாலும் மாவட்டத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களில் பெரும்பான்மையானோர் விரும்பும் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
இதை சோனியாவிடம் தெரிவிக்க 4 நாட்கள் காத்திருந்தும் அவரை சந்திக்கவில்லை. எனவே, ராகுலிடம் தெரிவித்த கருத்துகளை இமெயில் மூலம் சோனியாவுக்கு அனுப்பியிருப்பதாக இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.