அடையாறு ஆற்றை பராமரிக்கக் கோரி இன்று உண்ணாவிரதம்

அடையாறு ஆற்றை பராமரிக்கக் கோரி இன்று உண்ணாவிரதம்
Updated on
1 min read

அடையாறு ஆற்றை தூர்வாரக் கோரி பெருங்களத்தூரில் இன்று குடியிருப்போர் நலச்சங்கம் சார் பில் உண்ணாவிரதம் நடக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் இம்மாவட்டங்கள் வழி யாக ஓடும் அடையாறு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூடு வாஞ்சேரி, தாம்பரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், சைதாப்பேட்டை வழியாகச் செல்லும் அடையாறு ஆற்றால் கரையோரப் பகுதி குடி யிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. ஆற்றை சரிவர பராமரிக்காத கார ணத்தால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே, ஆற்றை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி குடியிருப் போர் நலசங்கத்தின் சார்பில் உண் ணாவிரத போராட்டம் இன்று பெருங் களத்தூரில் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in