Published : 28 Jul 2016 10:27 AM
Last Updated : 28 Jul 2016 10:27 AM

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை, திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ’கசடதபற’ இதழைத் துவக்கினார். ’ழ’, ’கவனம்’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார்.

'அன்று வேறு கிழமை', 'சூரியனுக்குப் பின் பக்கம்', 'கடற்கரையில் சில மரங்கள்' போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவை.

சமீபமாக, உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த ஞானக்கூத்தன் சிகிச்சை பலனினின்றி உயிரிழந்தார்.

சென்னை திருவல்லிக்கேணி ஈஸ்வர லாலா தாஸ் தெருவில் உள்ள மகனது இல்லத்தில் ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x