

நடிகை ஜோதிலட்சுமி மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் ஆகியோரின் மறைவு தமிழ்த் திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் குறிப்பு:
பிரபல திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான ஜோதி லட்சுமி மற்றும் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான பஞ்சு அரு ணாசலம் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 1963-ம் ஆண்டில் வெளிவந்த ‘பெரிய இடத்துப் பெண்’ என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஜோ தி லட்சுமி அறிமுகமானார். நான் நடித்த ‘அடிமைப் பெண்’, ‘நீரும் நெருப்பும்’, ‘தேடி வந்த மாப் பிள் ளை’, ‘கலாட்டா கல்யாணம்’ உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடினமான உழைப்பாளியும் பழகுவதற்கு இனிமையானவரு மான ஜோதிலட்சுமி, தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘கலங்கரை விளக்கம்’ திரைப்படத்தில் ‘பொன் னெழில் பூத்தது..,’ பாடல் உட்பட 200-க்கும் அதிகமான பாடல்களை பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார். நான் நடித்த ‘அவன் தான் மனிதன்’ திரைப்படத்துக்கு திரைக்கதை ஆசிரியராக பஞ்சு அருணாசலம் பணியாற்றியுள்ளார்.
இவர்கள் இருவரது மறைவு தமிழ்த் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல் லாம் வல்ல இறைவனை பிரார்த் திக்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள் ளார்.
பஞ்சு அருணாசலத்தின் மறைவால் தமிழ் திரையுலகில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.