கள்ள ஓட்டு போடுவதை தடுக்க பெரிய வாக்காளர் சீட்டு வழங்க நடவடிக்கை: துணை தேர்தல் ஆணையர் தகவல்

கள்ள ஓட்டு போடுவதை தடுக்க பெரிய வாக்காளர் சீட்டு வழங்க நடவடிக்கை: துணை தேர்தல் ஆணையர் தகவல்
Updated on
2 min read

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க முதல்முறையாக பெரிய வாக்காளர் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெறு வதற்கான அனைத்து நடவடிக் கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்கள் தங்கள் ஓட்டுகளை பணத்துக்கோ, பரிசுப் பொருட்களுக்கோ விற்கக்கூடாது. அவர்களுடைய வாக்குகளுக்கு உள்ள மதிப்பை வாக்காளர்கள் உணர வேண்டியது அவசியம். வாக்காளர்களின் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த தொகுதியில் 1000 இடங்களில் விழிப்புணர்வு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலை, தேர்தல் ஆணையம் மிக நுட்பமாக கண்காணித்து வருகிறது. இரவு நேரங்களில் பண விநியோகத்தை தடுப்பதற்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ள னர். சமூக விரோத சக்திகளை ஒடுக்கும் விதமாக, போதுமான துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட உள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

வாகனங்கள் மற்றும் கட்சியி னரின் நடமாட்டத்தை கண்காணிக்க, முக்கிய தெருக்கள், சாலை சந்திப்புகள், சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் வீடியோ பதிவு செய்யப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு உள்ளேயும், வெளி யேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். அதிகாரிகள் தேர்தல் விதிமீறல் களில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். உடனே அவர் பணியிட மாற்றமும் செய்யப்படுவார்.

இந்த தொகுதியில் 50 இடங் களில் 256 வாக்குச் சாவடிகள் உள் ளன. இவற்றில் 15 இடங்களில் உள்ள 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளது. அந்த பகுதிகளில், தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். புகார்களின் மீது 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

வாக்காளர்களுக்கு டோக்கன் கள் கொடுத்து, வர்த்தக நிறுவனங் களில் பொருட்களை கொடுக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என தொகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் கண்காணித்து வருகிறோம். இதேபோல மதுக்கடைகளில் வாக்காளர்களுக்கு மது விற்பனை செய்வது தெரியவந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுயேச்சைகள் கண்காணிப்பு

சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். அவர்கள் வேறு வேட்பாளர்கள் யாருக்கேனும் வாக்கு சேகரிக் கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகிறோம்.

கட்டாயம் வாக்களிக்க வேண் டும் என குழந்தைகள் மூலமாக பெற்றோர்களை வலியுறுத்தி வருகிறோம். அதற்காக பள்ளிக் குழந்தைகளை சந்தித்து உறுதி மொழி ஏற்க செய்து வருகிறோம்.

சின்னம் விவகாரம்

வேட்பாளர் மதுசூதனனுக்கு மின் கம்பம் சின்னம் வழங் கப்பட்டுள்ளது. அதை இரட்டை விளக்கு மின் கம்பம் என பிரச்சாரம் செய்வதாக புகார் வந்துள்ளது. அது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் சட்டப் பிரிவு ஆராய்ந்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ள ஓட்டு போட முடியாது

இந்த தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது. இதுவரை சிறிய வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டது. இம்முறை ஏ4 தாளில் பாதி அளவுக்கு வாக்காளர் சீட்டு வழங்கப்பட உள்ளது. அதில் வாக் காளரின் படமும் பெரிய அளவில் இருக்கும். மேலும் அதிக அளவில் துணை ராணுவப் படையும், அதிக கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. எனவே இந்தமுறை கள்ள ஓட்டு போட முடியாது என்றார்.

மாநில தலைமை தேர்தல் அலுவ லர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்தி கேயன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in