நாளை வேலைநிறுத்தம்: 6 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

நாளை வேலைநிறுத்தம்: 6 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
Updated on
1 min read

நாளை நடக்கவுள்ள வேலை நிறுத்தத்தில் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு தொழிலாளர் நல சட்டத்தில் கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்கள், முதலாளிகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதாகவும் தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களின் உரிமையை பறிக்கும் வகையிலும் அமைந் துள்ளன. ரயில்வே, பாதுகாப்பு மற்றும் நிதித் துறையில் அளவில்லா அந்நிய முதலீட்டை அனுமதிப்பது. அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக் காதது, வங்கிகள் தனியார் மயமாக்கல், துணை வங்கி களை மூடுவது மற்றும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து ஏற்கெனவே திட்டமிட்டப்படி செப்டம்பர் 2-ம் தேதி (நாளை) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 6 சங்கங்கள் பங்கேற்கின்றன. பொதுத்துறை வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள், மண்டல கிராமிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 6 லட்சம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in