புதுச்சேரி ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது: குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது: குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
Updated on
1 min read

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விவகாரத்தில் அனைத் துக் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக் கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமரை சந்தித்து முறையிட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் அதிகாரம் யாருக்கு என்பதில் ஆளுநருக் கும், முதல்வருக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அன்று எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக இவ்விஷயத்தை கையில் எடுத்த னர். அதையடுத்து நகராட்சி ஆணை யர் சந்திரசேகரன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பணியில் நீடிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதை அரசுத் தரப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச் சிவாயம் தலைமையில் அனைத் துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜஹான், கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏக் கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந் தான், தனவேலு, ஜெயமூர்த்தி, பாலன், விஜயவேணி, திமுக சார்பில் இரா.சிவா, கீதா ஆனந்தன், அதிமுக சார்பில் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் டி.பி.ஆர்.செல்வம் மற்றும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, புதிய நீதிக்கட்சி, ஆம் ஆத்மி உட்பட 21 கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தை பாஜக மற்றும் பாமக புறக்கணித்தன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக காங்கி ரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் நமச்சிவாயம் கூறியதா வது: அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய் யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம். இது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி யூனியன் பிரதேச அரசுக்கும் பொருந்தும். எனவே புதுவை மாநிலத்திலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது.

அனைத்துக் கட்சித் தலைவர் களும், எம்எல்ஏக்களும் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரத மர், உள்துறை அமைச்சர் ஆகி யோரை சந்தித்து மாநிலத்தில் உள்ள அரசியல் நிலவரம் மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அரசியல், சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு மாறான செயல்பாடுகள் குறித்து முறை யிட்டு விளக்குவது என முடிவெடுத் துள்ளோம்.

மத்திய அரசை அணுகி புதுச்சேரிக்கு உரிய நிதியை கேட்டுப் பெறவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம் கூறும்போது, ‘‘கூட்டத்தில் பங்கேற்பது எனது தனிப்பட்ட முடிவு. பங்கேற்கக் கூடாது என கட்சியில் இருந்து சொல்லவில்லை. புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in