

நிம்கேர் அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக சுகாதார தின உச்சி மாநாடு டெல்லியில் ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநாட்டு தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர் பேசும் போது, “இந்தியாவில் 4 லட்சம் பேருக்கு ஒரு உளவியல் நிபுணர் மட்டுமே உள்ளார். இந்தியாவில் தற்போது 4 ஆயிரம் உளவியல் நிபுணர்கள், ஆயிரம் உளவியலாளர் கள் மற்றும் 3 ஆயிரம் சமூக பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மன அழுத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.
தொலைதூர மருத்துவம் மற்றும் மனநல மருத்துவம் ஆகியவற்றை மையக் கருத்தாக கொண்டு டெல்லியில் உலக சுகாதார தின உச்சி மாநாடு நடக்கவுள்ளது” என்றார்.
இந்த சந்திப்பில் திரைப்பட இயக்குநர் பி.வாசு, நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், விவேக், டெலிமெடிசன் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.