

தமிழகத்தில் உள்ள 9 கோயில்கள் மற்றும் போடிநாயக்கனூர் அரண் மனையில் மூலிகைகளைப் பயன் படுத்தி வரைந்த பழங்கால ஓவியங் களை டிஜிட்டலில் பதிவு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் தென்னிந்திய அளவில் முக்கிய கோயில்களின் சிலைகளைப் புகைப்படங்களாக எடுத்து ஆவணப்படுத்தி உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோயில் புகைப்படங்களைத் தென்னிந்திய அளவில் சேகரித்து டிஜிட்டலாக்கி உள்ளனர். தற்போது, கோயிலில் உள்ள பழங்கால ஓவியங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் பிரிட்டிஷ் நூலகத் துடன் இணைந்து இப்பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது இரண்டாவதுகட்டமாக ரூ.31 லட்சம் மதிப்பில் இப்பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போது அறந்தாங்கியில் உள்ள ஆவுடையார் கோயில், கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோயில், குறிச்சி கோதண்டராமர் கோயில், பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயில், கோவில் பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயில், திருவையாறு ஐயாறப் பர் கோயில், கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வைத்திய நாதசாமி கோயில், ராமநாதபுரம் உத்தரகோச மங்கை மங்களநாத சாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் போடிநாயக்கனூர் அரண் மனை ஆகியவற்றில் உள்ள பழங் கால ஓவியங்களை ஆவணப்படுத் தும் பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு வரைந்துள்ள பழங்கால ஓவியங்களைப் புகைப்படம் எடுத்து அதன் சிறப்புகள் தொகுக்கப்பட்டு டிஜிட்டலாக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முருகேசன் கூறிய தாவது:
ரசாயனம் இல்லாமல் மூலிகை இலைச் சாறைக் கொண்டு ஓவியங் களை பல நூறு ஆண்டுகள் முன்பு முன்னோர் கோயிலில் வரைந்துள்ள னர். இந்த ஓவியங்கள் விலை மதிப்பில்லாதவை. ஏராளமான கோயில்களில் இதுபோன்ற ஓவி யங்களைப் பார்க்க முடியும். வருங் கால சமூகத்தினர் அறிவதற்காக அதை டிஜிட்டலில் பதிவு செய்யும் பணியை செய்கிறோம்.
இந்து சமய அறநிலையத் துறை உதவியுடன் மதுரை மீனாட்சி யம்மன் கோயிலில் மீனாட்சி திருக் கல்யாணம் உள்ளிட்ட ஓவியங் களைப் படம் பிடித்து அதன் முழு தகவலையும் பதிவு செய்துள்ளோம். அதேபோல் அழகர் கோயிலில் ராமாயண ஓவியங்களை டிஜிட்ட லாக்கியுள்ளோம்.
மேலூர் சித்திரசாவடியில் உள்ள மண்டபத்திலும் எஞ்சியுள்ள ராமா யண ஓவியங்களை எடுத்துள் ளோம். தருமபுரி அதியமான் கோட் டையில் உள்ள சென்ட்ராய பெரு மாள் கோயிலில் அழகான ஓவி யங்களையும், திருவண்ணாமலை ஜெயின் குகையில் உள்ள ஓவியங் களையும் பதிவு செய்துள்ளோம்.
தற்போது பிரிட்டிஷ் நூலக உதவி யுடன் இரண்டாவது கட்டமாக 9 கோயில்கள் மற்றும் போடி நாயக் கனூர் அரண்மனையில் உள்ள ஓவியங்களை டிஜிட்டலாக்கி வருகி றோம். இந்து சமய அறநிலையத் துறை இந்த ஓவியங்களைத் தொகுக்க உதவுகிறது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்த ஓவியங் களை டிஜிட்டல் மூலம் வருங் காலத்தினர் அறிய இயலும் வகை யில் இந்நடவடிக்கைகள் இருக் கும்.
இந்த ஓவியங்களைப் பாது காத்தால், நம் பழங்கலைகளை எதிர்காலத்தினர் அறிய முடியும். 2 ஆண்டுகளில் இப்பணி நிறை வடையும் என்றார்.