

காட்டுமன்னார் கோவில் தொகுதிக்கு புதிதாக அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என சட்டப்பேரவையில் அத்தொகுதி எம்எல்ஏ முருகுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடந்தது.
இதில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் பேசியதாவது:
''தமிழக வேளாண்துறையில் 2011-12ம் ஆண்டில் உணவுதானிய உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் – 2 கோடி ரொக்க பரிசு மற்றும் கிருஷிகர்மன் விருது, 2013-14ம் ஆண்டில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் – 2 கோடி ரொக்கம் பரிசு மற்றும் கிருஷிகர்மான் விருது. 2014.2015ம் ஆண்டில் பயறு வகை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் – 2 கோடி ரொக்கம் பரிசு மற்றும் கிருஷிகர்மான் விருது என 5 ஆண்டுகளில் மூன்றுமுறை கிரிஷிகர்மான் விருதினை இந்தியாவில் பெற்ற மாநிலம் தமிழகம் தான்.
மேலும், எனது தொகுதி காட்டுமன்னார் கோவிலில் இரண்டாக பிரித்து திருமுஸ்னம் தலைமையிடமாக வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும்.
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் புதிதாக அரசு மகளிர் கலைக்கல்லூரி துவங்கவேண்டும்'' என்று முருகுமாறன் எம்எல்ஏ பேசினார்.