கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கி தருவதாக மோசடி: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கி தருவதாக மோசடி: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வர்கள் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தேவகோட்டை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை ஏ.காலாப்பூரைச் சேர்ந்த எஸ்.ராஜரத்தினம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மாற்றுத்திற னா ளி. தேவகோட்டையைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மீனாள் ஆகியோர் எனது உறவி னர்கள். இருவரும் கடந்த 2011-ல் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரிடம் சொல்லி எனக்கு கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கித் தரு வதாகவும், அதற்கு ரூ.8 லட்சம் செலவாகும் என்றும் கூறினர். அவர்களின் பேச்சை நம்பி ரூ.3 லட்சம் ரொக்கமாகவும், வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சமும் டெபாசிட் செய்தேன்.

வேலை எப்போது கிடைக்கும் என கேட்டதற்கு, பணத்தை உரியவர்களிடம் வழங்கிவிட் டோம், சில நாட்களில் பணி நியமன உத்தரவு வரும் என்றனர். ஆனால் அவர்கள் சொல்லிய படி வேலை கிடைக்கவில்லை. இதனால், பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன். அதற்கு அவர்கள் பணத்தை திரும்ப தர முடியாது. பிரச்சினை செய்தால் உயிருடன் இருக்க முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியவும், பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் தேவகோட்டை போலீஸில் 28.11.2015-ல் புகார் அளித்தேன். போலீஸார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனது புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ். விமலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஏ.பி.பாலசுப்பிரமணியன் வாதி டும்போது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரணை நடை பெற்று வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மனுதாரரின் புகார் தொடர்பாக போலீஸார் விசாரிக்க வேண்டும்.

குற்றம் நடைபெற்றி ருப்பதற்கு முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in