Published : 09 Jun 2017 11:04 am

Updated : 09 Jun 2017 11:04 am

 

Published : 09 Jun 2017 11:04 AM
Last Updated : 09 Jun 2017 11:04 AM

விவசாயத்தை தொழில்நுட்பத்துடன் உருவாக்க 1000 முன்னோடி இளைஞர்கள்: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி தகவல்

1000

விவசாயத்தை தொழில் நுட்பத்துடன் மேற்கொண்டு உற்பத்தியைப் பெருக்க, மாவட் டத்துக்கு ஆயிரம் இளைஞர்களை முன்னோடி விவசாயிகளாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிநிலைய முதுநிலை விஞ்ஞானி என். பரசுராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் விவசா யத்தை மேலும் வலுப்படுத்தவும், காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றம், உயர்வைக் கொண்டு வருவது குறித்தும் எங்கள் நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.


இந்தியாவில் உணவு பாது காப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த இளைஞர்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். வேலை இல்லை என்ற குரல் பல இடங்களில் கேட்கிறது. ஆனால், விவசாயத்தில் வேலை கள் கொட்டிக் கிடக்கின்றன. விவசாயத்தை நோக்கி இளை ஞர்கள் நகர வேண்டும்.

தமிழகத்தில் உயிரியல், வேளாண் சார்ந்த படிப்பு வசதி கள் குறைவாகவே உள்ளன. உணவுப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டுவதை திறமையும், ஆர்வமும் மிக்க இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள், தனியாருடன் உற்பத்தியாளர்களும் பங்குதாரர்களாக சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசா யிகள் பயன்பெற முடியும்.

காய்கறி உள்ளிட்ட உற்பத்தி பொருட்களில் விலை வித்தி யாசத்தை பயனுள்ளதாக்க, ஒரே நிலத்தில் பகுதி, பகுதியாக பிரித்து அனைத்து வகையான பயிர்களையும் விளைவிக்க வேண்டும். வாட்ஸ் ஆப் உள்ளிட்ட வசதிகளை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த வேண்டும். 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் விவசாயம் செய்ய வந்தால் அவர் களை உற்சாகப்படுத்தி கவுரவிக்க வேண்டும். தாங்கள் பட்ட கஷ்டம் தங்கள் குழந்தைகள் படக்கூடாது எனக்கருதும் பெற்றோர்களின் நிலை மாற வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோர் ஏற்படுத்திய பசுமைப் புரட்சியை நிரந்தரப்படுத்த இளைஞர்களால் மட்டுமே முடியும்.

இந்தியாவில் பல ஆண்டு களாக பட்டினிச் சாவு இல்லாத நிலைமைக்கு காரணம், தொழி ல்நுட்ப விவசாயத்தின் சாதனையே. 2007-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை அடிப்படையில் புதுக் கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், தேனி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆத்மா திட்டம், வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு நடைபெற்றது. மாவட்டத்துக்கு 200 பேர் என 1000 இளைஞர்கள் முன்னோடி விவசாயிகளாக உருவாக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை மாவட்டத்துக்கு ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறோம். இதில் வெற்றி கிடைத்தால் விவசாயத்தில் தமிழகம் சாதிக்கும். வறட்சியை விமர்சித்துக்கொண்டே இருக்காமல், குறைந்த நாட்களில் விளையும் பயிர், உப்பு நீரில் விளையும் பயிர் என மாற்று முயற் சிகளை செயல்படுத்த வேண்டும்.

நண்டு, இறால், மீன் பண்ணைகளை உருவாக்க வேண்டும். பத்ம விருதுகள் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எந்த விருதானாலும் விவசாயிகள் கண்டிப்பாக இட ம்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொண்டு நிறுவன நிர்வாகிகள் அழகர்சாமி, முருகேசன் உடனிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளராவாரா எம்.எஸ்.சுவாமிநாதன்?

எம்.எஸ்.சுவாமிநாதனின் உதவியாளரான என். பரசுராமன் மேலும் கூறியது: பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாதது எதுவும் அல்ல. நிலைமைக்கு ஏற்ப சரியான முடிவை அவர் எடுப்பார். உலக அளவில் மதிக்கப்படும் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பு அளிக்கப்பட்டால், இந்தியாவுக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி என்றார்.விவசாய தொழில்நுட்பம்முன்னோடி விவசாயிகள்எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிநிலையம்முதுநிலை விஞ்ஞானிஎன். பரசுராமன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x