ரூ.80 லட்சம் மதிப்புள்ள ‘விக்’ திருட்டு: இளைஞர் கைது

ரூ.80 லட்சம் மதிப்புள்ள ‘விக்’ திருட்டு: இளைஞர் கைது
Updated on
1 min read

வேலை பார்த்த கடையில் ‘விக்’குகளை (செயற்கை முடி) திருடி தனிக்கடை வைத்து விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் ‘விக்’ விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் விக்குகளை விற்பனை செய்து வருகிறார். தனிப்பட்ட முறையிலும் ஏராளமானோர் இவரது கடையில் விக்குகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை மதிப் புள்ள விக்குகள் ரவிச்சந்திரனின் கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவரது கடையில் நெற்குன்றத்தை சேர்ந்த அருண் ராஜ் (29) என்பவர் கடந்த 2011 முதல் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது கடையில் இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள விக்குகள் மாயமாகியுள்ளன. இதுகுறித்து ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையில் இறங்கினர். இறுதியில், அதே கடையில் வேலை செய்த அருண்ராஜ் என்பவர் அவற்றை திருடியது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீஸார் கூறும்போது, “மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட விக்குகளை அருண்ராஜ்தான் திருடி உள்ளார். திருடிய விக்குகளை தனிக்கடை அமைத்து விற்பனை செய்ததை கண்டு பிடித்து கைது செய்துள்ளோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in