

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அங்கு வசிக்கும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இருந்து டெல்லி சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட முதல் கட்சி என்பதை தேமுதிக நிரூபித்துள்ளது.
டெல்லி வாழ் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவும், அவர்கள் வாழ்வாதா ரத்துக்கு உத்தரவாதம் ஏற்படுத்தவும் இத்தேர்தலில் தேமுதிக களம் இறங்கியது.
பண பலம், ஆட்சி அதிகாரம், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் உறுதியோடு, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தேமுதிக வேட்பாளர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தனை ஆண்டுகளாக பெரும் பணக்காரர்கள் வேட்பாளர்களாக வலம் வரும்போது, தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதையும், தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போடுவதையும் தவிர, எதையும் அறியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் தமிழர்கள் இருந்தனர்.
இப்போது, தாங்களும் வேட்பாளர்களாக ஆக முடியும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் டெல்லியில் வாழும் தமிழர்களிடையே தேமுதிக ஏற்ப டுத்திக் கொடுத்திருக்கிறது.
தேர்தல் பணிக்காக வந்து உழைத்த தேமுதிக அனைத்து நிர்வா கிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை கருத்தில் கொண்டு தேமுதிக என்றும் தனது ஜனநாயக கடமையை ஆற்றும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.