Published : 11 Sep 2016 10:18 AM
Last Updated : 11 Sep 2016 10:18 AM

காவிரி பிரச்சினை: நடிகர் சங்கம் இன்று ஆலோசனை

காவிரி நீர் பிரச்சினை தொடர் பாக நடிகர் சங்க செயற்குழு இன்று ஆலோசனை நடத்து கிறது.

உச்ச நீதிமன்ற உத்தர வின்பேரில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடந் தது. கன்னட திரையுல கினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் விவசாயி களுக்கு ஆதரவாக திரையு லகினர் போராடவில்லை என விவசாய சங்கத் தினர் வேதனை தெரி வித்திருந்தனர். இந்நிலை யில், தமிழ் நடிகர் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட் டம் சென்னையில் இன்று நடக்கிறது.

இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். காவிரி பிரச்சினை குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன் நடிகர் சங்கத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x