

கீழடி அகழாய்வில் கிடைக்கும் தகவல்கள் தற்போதைய வரலாற்றை மாற்றி அமைக்கும் என டி.கே.ரங்கராஜன் எம்பி தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களை நேற்று பார்வையிட்டார். பின்னர் மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியா ளர் களிடம் அவர் கூறியதாவது:
அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சியாலேயே கீழடியில் மூன்றாம்கட்ட அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப் புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெ ட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன.
கீழடியில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற் கூடங்கள் செயல்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அங்கே ஆய்வு நடத்தினால் வைகை ஆறு தடம் மாறிய தகவல்கள் கிடைக்கலாம். பழங்கால சமூகமாக இருந்தாலும் கீழடியில் வாழ்ந்த மக்கள் நாகரிக சமூகமாக இருந்ததற்கான சான் றுகள் கிடைத்துள்ளன. கீழடியில் ஆய்வை தொடரும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அங்கே கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக அமைப்பதற்கு தேவையான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும்.
பணமில்லா பரிவர்த்தனை முறை அறிவிப்பால் பெரும் முதலாளிகள் எவ்வித உழைப்புமின்றி கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே வழிவகுக்கும். நீட் தேர்வால் கிராமப்புற, பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாஜகவின் பங்கும் உள்ளது. சட்டப்பேரவையில் திமுக நடந்துகொண்டது ஜனநாயக விரோதமானது என்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலார் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பி னர்கள் என்.நன்மாறன், இரா.அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.