

குடும்ப உறவுகளை ஒதுக்கி வைத்தால் மட்டுமே தொண்டர் களின் அன்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெற முடியும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
காவேரிப்பட்டணத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 16-ம் தேதி தஞ்சையில் ம.நடராஜன் நடத்திய பொங்கல் விழாவில், அதிமுக பற்றியும், ஜெய லலிதாவைப் பற்றியும், என்னைப் பற்றியும் கூறியுள்ள சில கருத்து கள் கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா வை 33 ஆண்டுகள் தோளில் சுமந் தோம் என நடராஜன் கூறியுள்ளார். ஜெயலலிதாவால் ‘தீய சக்தி’ என வெளியேற்றப்பட்ட ஒரு நபர் தாங்கள்தான் இந்த கட்சியை இயக்குகிறோம் என சொல்கிறார். நடராஜனையும், அவரது குடும்பத் தினரையும் கட்சியில் இருந்தே நீக்கியவர் ஜெயலலிதா. அப்படி வெளியேற்றப்பட்டவர் இன்றைக்கு ‘தானே எல்லாம்’ என கூறுவது வேடிக்கையாக உள்ளது.
போயஸ் கார்டன் வீடு என் வீடு என்கிறார். இது உங்கள் பாட்டன் சம்பாதித்த சொத்தா, சொந்தம் கொண்டாடுவதற்கு? இது ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து. ஜெயலலிதாவுக்கு, திவாகரன் ஏ.கே.47 துப்பாக்கியுடன் பாதுகாப்பு அளித்தார் என நடராஜன் பேசியிருக்கிறார். இசட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே ஏ.கே.47 துப்பாக்கி வைத் திருக்க அனுமதி உண்டு. திவாகர னுக்கு ஏ.கே.47 எப்படி வந்தது என் பதை நடராஜன் விளக்க வேண்டும்.
முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்து, திறம்பட செயல் பட்டு, ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டத்தை கொண்டுவந்தார். ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக எம்பிக்களுடன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தனியாக ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு பிரதமரை சந்திக்கச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வர் சந்தித்த பிறகு இவருக்கு அங்கு என்ன வேலை? ஜெயலலிதா இருந்த போது, அவர் போய் பிரதமரை போட்டிப் போட்டுக்கொண்டு சந்திக்கச் சென்றிருப்பாரா?.
மத்திய, மாநில அரசுகளிடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும் போது பிரதமரை, தம்பிதுரையும், நடராஜனும் கடுமையாக விமர்சனம் செய்து வருவதை பொதுச் செயலா ளர் கண்காணிக்க வேண்டும். ஏதோ சதி செய்கிறார்கள் என்பதை உணர வேண்டும். திவாகரனிடமும், நடரா ஜனிடமும் குவியும் அதிகார மையத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும்.
எம்ஜிஆர் கட்சியை எப்படி தொண்டர்களிடம் விட்டுச் சென் றாரோ, அதைப்போலவே ஜெயலலி தாவும் கட்சியை தொண்டர்களிடம் விட்டுச் சென்றுள்ளார். ஆனால், 2500 கட்சி நிர்வாகிகள் இணைந்து பொதுச் செயலாளரை தேர்ந் தெடுத் துள்ளனர். அதிமுகவில் உள்ள ஒரு கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 500 தொண்டர்கள் அமைதியாக உள்ளனர். அவர்களுடைய அன்பை பொதுச் செயலாளர் பெற வேண்டும் என்றால், குடும்ப உறவு களை ஒதுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.