

மீனவர் பிரச்சினை தொடர்பாக நேற்று மீண்டும் பிரதமருக்கு முதல் வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவ பகுதி யைச் சேர்ந்த 4 மீனவர்கள் தங்களுக் குச் சொந்தமான இயந்திரப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றி ருந்தபோது 21-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு காங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீன்பிடி உரிமை
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட கார ணத்தால்தான் தமிழக மீனவர்களின் பாரம்பரியமிக்க மீன்பிடி உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை அனுபவிக்க முடியும்.
ஏற்கெனவே இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் பழுதடைந்துவிடாமல் பயன்படுத்தக் கூடிய நிலையில் திருப்பிக் கிடைக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். நீண்ட காலமாக போதிய பராமரிப்பு இன்றி கிடக்கும் அந்த படகுகளை விரைவாக மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களால் மீண்டும் அந்த படகுகளை பயன்படுத்த முடியும்.
எனவே, இலங்கை கடற்படை யால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும் அவர் களுக்குச் சொந்தமான 137 படகு களையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசின் உயர் அதிகாரத் தில் இருப்பவர்களிடம் இந்த பிரச்சினையை எடுத்துச்சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கு மாறு இந்திய வெளியுறவு அமைச் சகத்துக்கு தாங்கள் உத்தரவிடுமாறு மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.