காதலிக்க மறுத்த பெண் வீட்டில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு: இளம்பெண் கவலைக்கிடம் ; தங்கை, தம்பி காயம்

காதலிக்க மறுத்த பெண் வீட்டில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு: இளம்பெண் கவலைக்கிடம் ; தங்கை, தம்பி காயம்
Updated on
1 min read

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை யில் வசித்தவர் செந்தில்(29). இவர் கடந்த ஆண்டு தனியார் மினி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றிய போது, அந்தப் பேருந்தில் வந்த கொண்டங்கி பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை ஒருதலை யாகக் காதலித்தார். இதையடுத்து அந்த மாணவி, செந்தில் தன்னை கேலி செய்ததாக விழுப்புரம் மேற்கு போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீஸார், செந்திலை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 3-ம்தேதி, ஒரு கை மற்றும் கால் இழந்த நிலையில் செந்தில் தனது தாயாருடன், விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்தார். அதில், ‘எனது கை, கால்களை துண்டித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். அதே ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டில் நடந்து வந்தபோது சிலர் தன்னை தாக்கி, வலது கை, வலது காலை துண்டித்ததாகவும்தெரிவித்தார்.

இது தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக் கையில், “மருத்துவமனை சேர்க்கை, ரயில்வே ட்ராக்மேன் குறிப்பு, ஜிப்மர் மருத்துவமனை சேர்க்கைக் குறிப்பேடு ஆகிய வற்றை பார்வையிட்டோம். அதில் செந்தில் கை, கால்களை இழந்தது விபத்து என்றே சொல்கின்றன. எங்கள் விசாரணையின் மூலம் செந்திலின் கை, கால் துண்டிப்பு ரயில் விபத்தால் ஏற்பட்டது” என்று தெரிவித்தனர். இதையடுத்து செந் தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இந்நிலையில் நேற்று காலை செந்தில், தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். திடீரென தான் கொண்டு சென்ற பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்ட செந்தில், தான் காதலித்த பெண்ணையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். இதை அப்பெண்ணின் தங்கை, தம்பி தடுக்க முயன்றனர். இதில் அனைவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்த நீதிபதி விக்னேஷ் பிரபு, செந்திலிடம் வாக்குமூலம் பெற மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தீயில் சிக்கிய அந்த பெண் கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மருத் துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in