

பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழும் திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் வகையில், பீர்க்கன் கரணை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இதில் நகைக்கடை, அடகு கடை, வியாபாரிகள், வர்த்தக நிறுவன உரிமை யாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதி கள் என பலரும் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில், திருட்டுச் சம்பவங்களை தடுக்க முன் எச்ச ரிக்கை நடவடிக்கை மேற்கொள் வது குறித்து போலீஸார் ஆலோ சனை வழங்கினர்.
‘இரவில் கடை மூடப்பட்ட பின் கடைக்கு வெளியே சிறிய விளக்கை எரிய விட வேண்டும், அலாரம் அடிக்கும் வகையில் கருவி பொருத்த வேண்டும், அடகு கடைக்காரர்கள் திருட்டு நகைகளை வாங்கக் கூடாது’ என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சந்தேகப்படும்படி யாரேனும் நடமாடினால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வலியுறுத்தனர்.