

கடந்த 1-ம் தேதி நள்ளிரவில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சிபுரத்தில் வீட்டில் இருந்த சுவாதியை கொலை செய்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். ராம்குமாரின் புகைப்படத்தையும் போலீஸார் அதிகாரப்பூர்வமாக வெளியி டவில்லை. ராம்குமாரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவருடைய புகைப்படங்களை எடுத்து அனைவரும் வெளியிட்டு வருகின்றனர். சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கிய போலீஸார், ராம்குமார் கைது செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் ஆகியும் அவருடைய பேஸ்புக் பக்கத்தை போலீஸார் முடக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.