இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: குடிசை மாற்று வாரியம் எச்சரிக்கை

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: குடிசை மாற்று வாரியம் எச்சரிக்கை
Updated on
1 min read

குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு பெற்றுத்தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குடிசை மாற்று வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய, மாநில அரசு களின் பங்களிப்புடன் தொலை நோக்குத்திட்டம் 2023-ன் கீழ் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம், சுனாமி பாதிப்பு குடும்பங்களுக்கு வீட்டு வசதி மற்றும் மறு குடியமர்வு திட்டம் மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வழங்கி வருகிறது.

வீடுகள் ஒதுக்கீடு

தற்போது சென்னை மணலி புதுநகர், வியாசர்பாடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒக்கியம் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மறைமலை நகர், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு திட்டப் பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களில் பொருளா தாரத்தில் நலிவடைந்து வீடுகளின்றி அரசு புறம்போக்கு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில் குடிசை கள் அமைத்தவர்கள், திட்டப்பணி களுக்காக தேர்வு செய்யப்படும் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசிப்பவர்கள், வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு மறு குடியமர்வு வழங்கும் வகையில், அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் வாங்கி ஏமாற்றி வருவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இடைத்தரகர்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் அணுகினால் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகங்களில் நேரில் சென்று உண்மை நிலையை விசாரித்து தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் அணுகினால் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகங்களில் நேரில் சென்று உண்மை நிலையை விசாரித்து தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in