

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தன்னைப் பற்றி பாஜகவினர் ஆபாசமாக, இழிவாக எழுதிவருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் செ.ஜோதிமணி சென்னை யில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சமூக வலைதளங்களில் என் னைப் பற்றியும், என் குடும்பத்தினர் பற்றியும் பாஜகவினர் சிலர் கடந்த ஓராண்டாக ஆபாசமாக, இழிவாக எழுதிவருகின்றனர். இதற்கு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாஜகவினரால் என் மீது நடத் தப்படும் ஆபாச பாலியல் வன் கொடுமைகள் குறித்து என் பேஸ் புக் பக்கத்தில் ஆதாரங்களோடு பதிவிட்டிருந்தேன். எனது முக நூல் பதிவுக்கு குவியும் ஆதரவுக்கு பயந்து, என் பேஸ்புக் பக்கத்தையும் முடக்கியுள்ளனர்.
எனக்கு கடந்த 29-ம் தேதி முதல் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் இரவு பகலாக வருகின்றன. அதில் ஆபாசமாகவும், மிரட்டலாகவும் பேசுகின்றனர். இதனால், நானும் குடும்பத்தினரும் கடுமை யான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என் பவரும் இந்த ஆபாச வன்கொடுமையில் ஈடுபட்டு வருகிறார். இதை காவல் துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் ஜோதிமணி தெரிவித்துள்ளார். பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த 22 பேர் பட்டியலையும் அவர் அளித்துள்ளார்.