

காவிரி கரையோர மக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல் மேலும் கூடுதலாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆடிபெருக்கு வருவதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து கூடு தலாக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, ஆடிப்பெருக்கு விழா வில் பொதுமக்கள் புனித நீராட வசதியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தர விட்டார். இதையடுத்து, சேலம் ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி கூடு தலாக தண்ணீர் திறந்துவிட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர்.