தீபாவளி: தி.நகர், புரசை, பாரிமுனையில் கூடுதல் பாதுகாப்பு

தீபாவளி: தி.நகர், புரசை, பாரிமுனையில் கூடுதல் பாதுகாப்பு
Updated on
1 min read

தீபாவளிக்கு பொருட்களை வாங்குவதற்காக தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளிக்கு ஆடைகள் வாங்க மக்கள் ஆர்வம்காட்ட தொடங்கிவிட்டனர். இதனால் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தி.நகரில் 2 துணை ஆணையர் கள், 3 உதவி ஆணையர்கள், 10 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 650 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2 ஆய்வாளர்கள் தலைமை யில் 40 போலீஸார் கொண்ட தனிப்படையினர் சாதாரண உடை யில் கண்காணிக்கின்றனர். தி.நகரில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் வைக்கப்பட்டு கண்காணிக் கப்படுகிறது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமும், ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புரசைவாக்கத்தில் ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், 3 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 போலீஸார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். வண்ணாரப் பேட்டையில் 2 உதவி ஆணையர் கள் தலைமையிலும், வேளச்சேரி யில் ஓர் ஆய்வாளர் தலைமை யிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் புகார் கொடுக்க விரும்பினால் 9498100176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in