

ரூ. 19 கோடியில் 42 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடையாற்றை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு, டிசம் பரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக் கால், அடையாற்றை ஒட்டிய பகுதி கள் அதிகம் பாதிக்கப்பட்டன. குடியிருப்புகளை, 10 அடி உயரத் துக்கு வெள்ளம் சூழ்ந்தது. முன் னெச்சரிக்கையாக, அடையாற்றில் முதற்கட்டமாக, ஆதனூர் முதல், திருமுடிவாக்கம் வரை, 14 கி.மீ.க்கு, ரூ.3 கோடி செலவில், சீரமைப்பு பணிகள் நடந்தது. அதேபோல் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம், திருவள்ளூர் எல்லைக்கு உட்பட்ட, திருநீர்மலை முதல், ஜாபர்கான்பேட்டை வரை, 16 கி.மீ.க்கு அடையாற்றை தூர்வாரி, ஆழப்படுத்தும் பணி, 3.19 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது.
அரசு உத்தரவு
இதனை தொடர்ந்து அடை யாற்றை வருவாய் ஆவணங்களில் உள்ளது போல் புனரமைக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரையும் 24 கி.மீ. தூரம் ரூ. 19 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல் அடையாற்றில் இணையும் சோமங்கலம், ஒரத்தூர், மணிமங்கலம் போன்ற கிளை ஆறுகளையும் 14 கி.மீ. சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சி யர் பொன்னையா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடை பெற வேண்டும், ஆக்கிரமிப்புகள் இருந்தால் கண்டிப்பாக அகற்ற வேண்டும், யாருக்கும் சலுகை காட்டக்கூடாது, வடகிழக்கு பருவ மழைக்குள் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்தையா, உதவி பொறியாளர் குஜராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆதனூர் முதல் மனப்பாக்கம் வரையும் 24 கிமீ தூரம் ரூ.19 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.