

தமிழகத்தில் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் காரணமாக தாமதமான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடக்கிறது.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு ஜனவரி மாதம் முதல் தவணை யாகவும், பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் தவணையாகவும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இந்த ஆண்டு தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி (நேற்று) வரை தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனால் போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிப்போனது.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ம் தேதி (நாளை) நடக் கிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில்1652 மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதி களில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 ஆயி ரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. இப்பணியில் சுகாதாரப் பணி யாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட் சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தை சாமி கூறியதாவது:
தமிழகம் 13-வது ஆண்டாக போலியோ பாதிப்பு இல்லாத நிலையை அடைந்துள் ளது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. போலியோ சொட்டு மருந்து மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும்.
இவ்வாறு டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.